Friday, May 18, 2012

கத்தம் - குர்ஆன் ஓதி அதன் தவாபை இறந்தவர்களுக்கு சேர்ப்பித்தல்

கத்மு (ختم) என்பதற்கு  முடித்தல் என்று அர்த்தமாகும். என்றாலும், இஸ்லாமிய பாரம்பரிய நடைமுறை அந்த கத்மு என்ற வார்த்தையை குர்ஆன் ஓதி முடித்தலுக்கு பயன்படுத்தி வருகின்றது. சமூக வழக்கில் குர்ஆனை முழுதாகவோ அல்லது பகுதியாகவோ ஓதி அதன் நன்மையை எம்மில் வபாத்தானவர்களுக்கு சேர்த்து வைப்பதற்கு "கத்தம்" என கூறுகிறோம். இதற்கான ஆதாரங்களில் சில இங்கு தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.

ஆயிஷா (رضى الله تعالى عنها) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (صلى الله عليه وسلم)  அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவிக்காமல் திடீரென இறந்துவிட்டார். அவர் (மட்டும் இறுதி நேரத்தில்) பேசியிருந்தால் தர்மம் செய்யுமாறு அறிவுறுத்தியிருப்பார் என்று நான் எண்ணுகிறேன். இந்நிலையில் அவருக்காக நான் ஸதகா செய்தால் அவருக்கு நன்மை கிட்டுமா?'' என்று கேட்டார். அதற்கு நபி (صلى الله عليه وسلم)  அவர்கள் "ஆம்' என்றார்கள்

ஸஹீஹ் முஸ்லிம்
கிதாபுஸ் ஸகாத்/ ஹதீத் எண் 1830


இந்த ஹதீதின் பிரகாரம் அந்த ஸஹாபி குறித்தவொரு செயலை பற்றி ரஸுலுல்லாஹ்விடம் கேட்கவில்லை. பொதுவாக ஸதகா செய்தால் அது இறந்தவரை போய்ச் சேரும் என்றுதான் ரஸுலுல்லாஹ் கூறுகிறார். இதிலிருந்து ஸதகா எனும் வரையறைக்குள் அடங்கும் எந்தச் செயலையும் செய்து அதன் நன்மையை இறந்தவர்களுக்கு சேர்த்து வைக்கலாம் என்பது தெளிவு.இனி ஸதகாவினுள் அடங்கும் செயல்கள் எவை என்பதையும் ரஸுலுல்லாஹ் கூறாமல் போகவில்லை.


Tuesday, May 8, 2012

இமாம் தஹபி (رحمه الله) ஒவ்வொரு நூற்றாண்டின் முஜத்திதுகளையும் பற்றி

ரஸுலுல்லாஹ் (صلى الله عليه وسلم) கூறினார்கள்:
நிச்சயமாக அல்லாஹு தஆலா ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இந்த உம்மத்துக்காக அவர்களுடைய தீனை உயிர்ப்பிக்கக் கூடிய முஜத்தித் ஒருவரை அனுப்புவான்.

நூல் - அபூ தாவூத், ஹாகிம்.

ஹதீத் கலை மேதையான ஹாபிழ் இமாம் தஹபி (رحمه الله) ஒவ்வொரு நூற்றாண்டின் முஜத்தித் சம்பந்தமாகவும் தமது ஸியரில் பின்வருமாறு கூறுகிறார்:
ஹஸ்ஸான் இப்னு முஹம்மத் கூற தான் கேட்டதாக அல்-ஹாகிம் கூறுகிறார்:ஹிஜ்ரி 303 இல் நாங்கள் இப்னு சுரைஜுடைய மஜ்லிஸில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அறிஞர்களில் ஒருவரான ஒரு ஷெய்க் எழுந்து "நற்செய்தி ஓ நீதிபதியே (இப்னு சுரைஜ்)! " நிச்சயமாக அல்லாஹு தஆலா ஒவ்வொரு நூற்றாண்டிலும் மார்க்கத்தை புதுப்பிக்கக் கூடிய ஒருத்தரை (முஜத்தித்) அனுப்புகிறான்.முதலாம் நூற்றாண்டில் அல்லாஹு தஆலா உமர் இப்னு அப்தில் அஸீஸை அனுப்பினான். இரண்டாம் நூற்றாண்டில் அல்லாஹு தஆலா முஹம்மத் இப்னு இத்ரீஸ் அஷ்-ஷாபியை அனுப்பினான். மூன்றாம் நூற்றாண்டில் அல்லாஹு தஆலா உங்களை (இப்னு சுரைஜ்) அனுப்பியுள்ளான்...  எனக் கூறினார்.

நான் (இமாம் தஹபி) கூறுகிறேன்:நாலாம் நூற்றாண்டில் ஷெய்க் அபூ ஹாமித் இஸ்ஃபராயீனீ  இருந்தார்.ஐந்தாம் நூற்றாண்டில் அபூ ஹாமித் அல்-கஸ்ஸாலி  இருந்தார்.ஆறாம் நூற்றாண்டில் ஹாபிழ் அப்துல் கனீ இருந்தார்.ஏழாம் நூற்றாண்டில் ஷெய்குனா அபுல் ஃபத்ஹ் இப்னு தகீகுல் ஈத் இருந்தார்.