Friday, November 25, 2011

வஸீலா (03) - எவர் ஒருவர் தனது வீட்டை விட்டு...

الكتب » سنن ابن ماجه » كتاب المساجد والجماعات » باب المشي إلى الصلاة


حدثنا ‏ ‏محمد بن سعيد بن يزيد بن إبراهيم التستري ‏ ‏حدثنا ‏ ‏الفضل بن الموفق أبو الجهم ‏ ‏حدثنا ‏ ‏فضيل بن مرزوق ‏ ‏عن ‏ ‏عطية ‏ ‏عن ‏ ‏أبي سعيد الخدري ‏ ‏قال ‏ ‏قال رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏من خرج من بيته إلى الصلاة فقال اللهم إني أسألك بحق السائلين عليك وأسألك بحق ممشاي هذا فإني لم أخرج ‏ ‏أشرا ‏ ‏ولا ‏ ‏بطرا ‏ ‏ولا ‏ ‏رياء ‏ ‏ولا سمعة وخرجت اتقاء سخطك وابتغاء مرضاتك فأسألك أن تعيذني من النار وأن تغفر لي ذنوبي إنه لا يغفر الذنوب إلا أنت أقبل الله عليه بوجهه واستغفر له سبعون ألف ملك


ரஸுலுல்லாஹ் (صلى الله عليه وسلم) அவரகள் கூறினார்கள்:
எவர் ஒருவர் தனது வீட்டை விட்டு தொழுகைக்காக (பள்ளிவாயலுக்குச்) செல்ல வெளியாகிய பின்:

யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடத்தில் யாசிப்போரின் பொருட்டினால் கேட்கிறேன். இப்பாதை வழியே தொழுகைக்காக நடந்து செல்வோரின் பொருட்டினால் கேட்கிறேன். நிச்சயமாக நான் தீங்கிழைப்பவனாகவோ, பெருமை மிக்கவனாகவோ, பிறர் பார்க்கவேண்டும் என்பதற்காகவோ அல்லது  புகழுக்காகவோ, வெளியாகவில்லை.
மாறாக, உனது கோபத்தை தவிர்ந்து கொள்வதற்கும் உனது திருப்பொருத்தத்தை நாடியுமே வெளியாகினேன். ஆகவே, நரகிலிருந்து என்னைப் பாதுகாக்குமாறும் எனது பாவங்களை மன்னிக்குமாறும் உன்னிடம் கேட்கின்றேன். நிச்சயமாக பாவங்களை மன்னிக்கக் கூடியவன் உன்னையன்றி வேறு யாருமில்லை,

என்று கூறுகிறாரோ, அல்லாஹ் அவருக்காக (அவரது துஆவை) ஏற்றுக்கொள்வான். மேலும் அவருக்காக எழுபதாயிரம் மலக்குகள் பாவமன்னிப்புக் கோருவார்கள்.

அறிவிப்பவர் :- அபூ ஸயீத் அல்-குத்ரீ (رضي الله عنه
நூற்கள் :- 
  • ஸுனன் இப்னு மாஜா
  • அமாலீ இப்னு புஷ்ரான் 
  • முஸ்னத் அஹ்மத்
  • தபரானியின் துஆ  
  • பைஹகீயின் தஅவாத் அல்-கபீர்
  • முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா..etc
இந்த ஹதீத் ஹஸன் தரத்திலமைந்த ஹதீதாகும். ஹதீத் கலையில் தேர்ச்சி பெற்ற 5 ஹாபிழ்கள் (100,000 ஹதீதுகளை அறிவிப்பாளர் தொடருடன் மனனமிட்டோர்) இந்த ஹதீதை ஹஸன் என கூறியுள்ளனர்.
  1. இமாம்ஹாபிழ் முன்திரீ (رحمه الله) அல்-தர்கீப் அல்-தர்ஹீப் 
  2. இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி (رحمه الله - அமாலீ அல்-அத்கார் 
  3. இமாம் ஹாபிழ் இராகீ (رحمه الله) - தக்ரீஜ் அஹாதீத் அல்-இஹ்யாஉ
  4. இமாம் ஹாபிழ் திம்யாதீ (رحمه الله) - அல்-முதஜ்ஜர் அல்-ராபிஹ் 
  5. இமாம் ஹாபிழ் பூசீரீ(رحمه الله) - மிஸ்பாஹ் அல்-ஸுஜாஜஹ்
இப்னு குசைமா  தனது ஸஹீஹிலே இந்த ஹதீதை ஸஹீஹ் என கூறுகிறார்.

இப்னு புஷ்ரானின் அமாலீயில் உள்ள அறிவிப்பு:

  (حديث مرفوع)
وَأَخْبَرَنَا دَعْلَجٌ ثنا جَعْفَرُ بْنُ أَحْمَدَ السَّاقَانِيُّ ، ثنا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ ضُرَيْسٍ ، ثنا ابْنُ فَضْلٍ ، ثنا أَبِي ، عَنْ عَطِيَّةَ ، حَدَّثَنِي أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ ، قَالَ : ، قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَا مِنْ رَجُلٍ يَخْرُجُ مِنْ بَيْتِهِ إِلَى الصَّلاةِ ، فَقَالَ : اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِحَقِّ السَّائِلِينَ عَلَيْكَ ، وَبِحَقِّ مَمْشَايَ هَذَا ، لَمْ أَخْرُجْ أَشَرًا ، وَلا بَطَرًا ، وَلا رِيَاءً ، وَلا سُمْعَةً ، خَرَجْتُ اتِّقَاءَ سَخَطِكَ ، وَابْتِغَاءَ مَرْضَاتِكَ ، وَأَسْأَلُكَ أَنْ تُعِيذَنِي مِنَ النَّارِ ، وَتَغْفِرَ لِي ذُنُوبِي ، إِنَّهُ لا يَغْفِرُ الذُّنُوبَ إِلا أَنْتَ ، إِلا وُكِّلَ بِهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ يَسْتَغْفِرُونَ لَهُ ، وَأَقْبَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْهِ بِوَجْهِهِ حَتَّى يَقْضِيَ صَلاتَهُ "