Friday, November 25, 2011

வஸீலா (02)- ரஸுலுல்லாஹ் (صلى الله عليه وسلم) அவர்களுக்கு அல்லாஹ் அவரின் மவ்த்திற்கு பின் கொடுத்திருக்கும் சங்கை


الكتب » سنن الدارمي » المقدمة » باب ما أكرم الله تعالى نبيه صلى الله عليه وسلم بعد موته

حدثنا ‏ ‏أبو النعمان ‏ ‏حدثنا ‏ ‏سعيد بن زيد ‏ ‏حدثنا ‏ ‏عمرو بن مالك النكري ‏ ‏حدثنا ‏ ‏أبو الجوزاء أوس بن عبد الله ‏ ‏قال ‏ ‏قحط ‏ ‏أهل ‏ ‏المدينة ‏ ‏قحطا ‏ ‏شديدا فشكوا إلى ‏ ‏عائشة ‏ ‏فقالت انظروا قبر النبي ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏فاجعلوا منه ‏ ‏كوى ‏ ‏إلى السماء حتى لا يكون بينه وبين السماء سقف قال ففعلوا فمطرنا مطرا حتى نبت العشب وسمنت الإبل حتى ‏ ‏تفتقت ‏ ‏من الشحم فسمي عام ‏ ‏الفتق

அபூ அல்-ஜவ்ஸா அவ்ஸ் இப்னு அப்துல்லாஹ் அறிவிக்கிறார்கள்:

''மதீனா மக்கள் கடும் வரட்சியால் பாதிக்கப்பட்டபோது, அவர்கள் ஆயிஷா (رضي الله عنها) அவர்களிடம் (தங்களின் நிலையை) முறையிட்டார்கள்:  அதற்கு ஆயிஷா (رضي الله عنها) அவர்கள் நபி (صلى الله عليه وسلم) அவர்களின் கப்ருக்குச் சென்று கப்ருக்கும் வானத்திற்கும் இடையில் எந்தவொரு திரையும் இல்லாதவாறு வானத்தை நோக்கி ஒரு வழியை (துளையை) ஏற்படுத்துங்கள்
என்று சொன்னார்கள். அவர்களும் அவ்வாறே செய்தனர். பின் பெரும் மழை பெய்தது (எந்தளவுக்கென்றால்) புற்கள் (எங்கும்) வளர்ந்ததுடன் ஒட்டகங்கள் அதிக கொழுப்பினால் வெடித்து விடும் அளவிற்கு கொழுத்தன. எனவே அந்த ஆண்டு “ஆமுல் ஃபத்க்” என பெயரிடப்பட்டது.

ஸுனன் தாரிமி
இந்த ஹதீத் பின்வரும் நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • இமாம் இப்னு அல்-ஜவ்ஸீ (رحمه الله)ன் அல்-வஃபா
  • இமாம் தகியுத்தீன் அல்-சுப்கீ (رحمه الله)ன் ஷிபா அல்-ஷிகாம்
  • இமாம் கஸ்தலானி (رحمه الله) ன் மவாஹிப்

இந்த ஹதீதை இமாம் தாரிமி (رحمه الله) அவர்கள் தமது ஸுனனிலே “ரஸுலுல்லாஹ் அவர்களுக்கு அல்லாஹ் அவரின் மவ்த்திற்கு பின் கொடுத்திருக்கும் சங்கை” எனும் தலைப்பில் பதிவு செய்திருக்கிறார்கள். இது ஹஸன் தரத்திலமைந்த ஹதீதாகும்.

உம்முல் மூமினீனான ஆய்ஷா
(رضي الله عنها) அவர்களின் இஸ்லாம் நவீன தௌஹீத் வாதிகளின் இஸ்லாத்தை விட்டும் எந்தளவுக்கு வித்தியாசமானது என மேலுள்ள சம்பவத்தில் இருந்து அறியலாம். அன்னையவர்கள் கப்ரிலுள்ள ரஸுலுல்லாஹ் (صلى الله عليه وسلمஅவர்களை வஸீலாவாக்கி மக்களை தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறு ஏவினார்கள். ஆனால் நவீன தௌஹீத் வாதிகளோ இதனை ஷிர்க் என்கின்றனர்.அன்று வாழ்ந்த எந்தவொரு ஸஹாபா பெருமக்களும் இதனை எதிர்க்கவில்லை. குறைந்தபட்சம் இது ஹராம் என்றாவது கூறவில்லை.

இமாம் தாரிமி அவர்கள் ஹிஜ்ரி 181ல் பிறந்தவர்கள். நேர்வழி நடந்த ஸலஃபுஸ் ஸாலிஹீன்களில் முக்கியமானவர். இமாம் முஸ்லிமின் ஆசிரியர். அவர் இவ்வாறான ஒரு ஹதீதை தமது ஸுனனிலே "ரஸுலுல்லாஹ் அவர்களுக்கு அல்லாஹ் அவரின் மவ்த்திற்கு பின் கொடுத்திருக்கும் சங்கை" எனும் தலைப்பிலே பதிவு செய்தது ஏன்? .
ரஸுலுல்லாஹ் அவர்கள் இறந்து மண்ணோடு மண்ணாகி விட்டார்கள் என்ற நவீன தௌஹீத் வாதிகளின் நம்பிக்கைக்கு இது மாற்றமாக அல்லவா உள்ளது?!

இந்த தலைப்பை எதிர்த்து ஸலபுகளில் யாராவது குரல் கொடுத்தார்களா? இதனை ஷிர்க் என எதிர்த்தார்களா? அவரை கப்ர் வணங்கி என யாராவது முத்திரை குத்தினார்களா? ஆதாரம் காட்ட முடியுமா இன்றைய நவீன தௌஹீத் வாதிகளால்?
ஒரு போதும் காட்ட முடியாது. மாறாக அவரை ஆரம்ப காலங்களில் ஹதீத்களை தொகுத்த ஒரு மாபெரும் இமாம் என இன்றைய நவீன தௌஹீத் வாதிகள் உட்பட அனைவரும் போற்றுகின்றனர்.

எனவே நாமும் அன்னை ஆயிஷா அவர்களின் செயலை பின்பற்றி நல்லடியார்கள் மூலமாகஅல்லாஹ்விடத்தில் வஸீலா தேடி ஈடேற்றம் பெறுவோம்.

Note: இந்த ஹதீதின் உறுதித்தன்மை பற்றிய விளக்கங்களுக்கு பின்வரும் தளங்களை பார்வையிடவும்.
ஷெய்க் மஹ்மூத் மம்தூஹ் அவர்களின் நூலிலிருந்து
ஷெய்க் கலாநிதி. தாஹிருல் காதிரி அவர்களின் நூலிலுருந்து