Tuesday, November 29, 2011

வஸீலா [04] - பிலால் رضي الله عنه ரசூல்லாஹ்வின் கப்ருக்கு வருகை தந்து " அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் உங்களின் உம்மத்துக்காக வேண்டி மழை பெய்யுமாறு துஆ செய்யுங்கள்.. என்று கூறினார்கள்.

دَلَائِلُ النُّبُوَّةِ لِلْبَيْهَقِيِّ >> جُمَّاعُ أَبْوَابِ غَزْوَةِ تَبُوكَ >> جُمَّاعُ أَبْوَابِ مَنْ رَأَى فِي مَنَامِهِ شَيْئًا مِنْ آثَارِ نُبُوَّةِ مُحَمَّدٍ >> بَابُ : مَا جَاءَ فِي رُؤْيَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَنَام

(حديث موقوف)
 أَخْبَرَنَا أَبُو نَصْرِ بْنُ قَتَادَةَ ، وَأَبُو بَكْرٍ الْفَارِسِيُّ ، قَالا : أَخْبَرَنَا أَبُو عَمْرِو بْنُ مَطَرٍ ، أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ عَلِيٍّ الذُّهْلِيُّ ، أَخْبَرَنَا يَحْيَى ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ ، عَنِ الأَعْمَشِ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ مَالِكٍ ، قَالَ : " أَصَابَ النَّاسَ قَحَطٌ فِي زَمَانِ عُمَرَ بْنِ الْخَطَّابِ ، فَجَاءَ رَجُلٌ إِلَى قَبْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ , اسْتَسْقِ اللَّهَ لأُمَّتِكَ فَإِنَّهُمْ قَدْ هَلَكُوا ، فَأَتَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَنَامِ ، فَقَالَ : ائْتِ عُمَرَ فَأَقْرِئْهُ السَّلامَ ، وَأَخْبِرْهُ أَنَّكُمْ مُسْقَوْنَ ، وَقُلْ لَهُ : عَلَيْكَ الْكَيْسَ الْكَيْسَ ، فَأَتَى الرَّجُلُ عُمَرَ ، فَأَخْبَرَهُ ، فَبَكَى عُمَرُ ، ثُمَّ قَالَ : يَا رَبُّ ، مَا آلُو إِلا مَا عَجَزْتُ عَنْهُ "
 

மாலிக் (மாலிகுத்தார் رضي الله عنه) அறிவிக்கிறார்கள்:
உமர் (رضي الله عنه) அவர்களின் காலத்தில் மக்கள் பஞ்சத்தினால் கஷ்டப்பட்டார்கள். அப்போது ஒரு மனிதர் (பிலால் இப்னு ஹாரிஸ் அல்-முஸ்னி رضي الله عنه) ரசூல்லாஹ்வின் கப்ருக்கு வருகை தந்து
" அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் உங்களின் உம்மத்துக்காக வேண்டி மழை பெய்யுமாறு துஆ செய்யுங்கள், ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அழிந்துவிட்டார்கள் " என்று கூறினார்கள்.

.பின் ரஸுலுல்லாஹ் (صلى الله عليه وسلم)
அவரகள் (அந்த மனிதரின்) கனவில் வந்து " உமரிடம் சென்று (எனது) சலாத்தை கூறுங்கள்" என்றும் இன்னும் "நீங்கள் (மக்கள்) மழை பொழிவிக்கப்படுவீரகள் (எனவும்), நீங்கள் (உமர்) விவேகமாக நடந்து கொள்ளுங்கள், நீங்கள் விவேகமாக நடந்து கொள்ளுங்கள் என்றும் கூறுங்கள்" எனக் கூறினார்.

(பின்) அந்த மனிதர் உமர் (رضي الله عنه) அவர்களிடம் சென்று இதனை அறிவித்தார். (இதனை கேட்ட) உமர் (رضي الله عنه) அழுதார்கள். பிறகு "என்னுடைய இரட்சகனே! எனது சக்திக்கு அப்பாற்பட்டதை தவிர நான் எதையும் முயற்சி செய்யாமலில்லை" என கூறினார்கள்.



      
ஆதாரம்:-

    இமாம் பைஹகீ (رحمه الله)யின் தலாயிலுன் நுபுவ்வா (7/47)
    முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா (12/31-32) [1]
    இமாம் ஹாபிழ் கலீலீ (رحمه الله)இன் அல்-இர்ஷாத் (1/313-314) [2]
    இமாம் இப்னு அப்தில் பர் (رحمه الله) இன் அல்-இஸ்தீஆப் (2/464) [3]
    இமாம் இப்னு அஸாகிர் (رحمه الله) இன் தாரீக் திமிஷ்க்  
    ஷெய்குல் இஸ்லாம் இமாம் தகீயுத்தீன் அஸ்-ஸுப்கி தனது ஷுபாஉஸ் ஸிகாமில்



இமாம் இப்னு கதீர் (رحمه الله)  தமது அல்-பிதாயா வந்-நிஹாயா (7/106) பைஹகீயின் அறிவிப்பை கூறிவிட்டு இந்த அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹானது என கூறுகிறார்.
 وهذا إسناد صحيح

[4]. 

இமாம் இப்னு கதீர் (رحمه اللهமீண்டும் தமது ஜாமிஉல் மஸானீத்தில் (1/223) இதன் அறிவிப்பாளர் தொடர் நல்லதும் பலமானதும் என கூறிகிறார்.
 إسناده جيد قوى



ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு ஹஜர் (رحمه الله) தமது பத்ஹுல் பாரியில் (2/495) இந்த அறிவிப்பை பற்றிக்கூறும் போது இப்னு அபீ ஷைபா ஸஹீஹான அறிவிப்பாளர் தொடருடன் அறிவிக்கிறார் எனக் கூறுகிறார்
وروى ابن أبي شيبة بإسناد صحيح..


ஷெய்க் முஹத்தித் மஹ்மூத் சயீத் மம்தூஹ் அல்-மிஸ்ரி இதனை ஸஹீஹ் என உறுதிப்படுத்துகிறார்.

இஸ்லாமிய வரலாற்றில் இந்த ஹதீதை பதிவு செய்த ஒரு ஹாபிழ் கூட இந்த ஹதீதை ஷிர்க் என்றோ பித்ஆ என்றோ கூறவில்லை. குறைந்தபட்சம் ழயீஃப் என்றாவது கூறவில்லை.

இச்செய்தியில் இடம் பெறும் மாலிகுத்தார் என்பவர் யாரென்று அறியப்படாதவர் என சிலர் குற்றம் சுமத்துகின்றனர். இதோ அவர்களுக்கான பதில்:





1.

الطبقات الكبري لابن سعد (5/12):
مالك الدار مولى عمر بن الخطاب وقد انتموا إلى جبلان من حمير وروى مالك الدار عن أبي بكر الصديق وعمر رحمهما الله روى عنه أبو صالح السمان وكان معروفاا

இப்னு ஸஅத் தமது தபகாத்தில் கூறுகிறார்
மாலிக்குத்தார் - உமர் இப்னு கத்தாபின் விடுதலை செய்யப்பட்ட அடிமை. அபூபக்கர் உமர் (رضي الله عنه) ஆகியோரிடமிருந்து அறிவித்துள்ளார். அவர் அறியப்பட்டவர்.


2.

قال ابن حبان في الثقات (5/384): مالك بن عياض الدار يروى عن عمر بن الخطاب روى عنه أبو صالح السمان وكان مولى لعمر بن الخطاب أصله من جبلان

இப்னு ஹிப்பான் தனது கிதாபுத் திகாத்தில் மாலிக்குத்தாரை குறிப்பிட்டுள்ளார்.

3.
ஹாபிழ் கலீலி தமது இர்ஷாதில்:
மாலிக்குத்தார் - உமர் இப்னு கத்தாப் (رضي الله عنه)யின் விடுதலை செய்யப்பட்ட அடிமை. எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். தாபியீன்கள் அவரை புகழ்ந்துள்ளனர் எனக் கூறியுள்ளார்

الْإِرْشَادُ فِي مَعْرِفَةِ عُلَمَاءِ الْحَدِيثِ لِلْخَلِيلِيِّ
مالك الدار مولى عمر بن الخطاب الرعاء عنه : تابعي , قديم , متفق عليه , أثنى عليه التابعون

4.
இமாம் யஹ்யா இப்னு மயீன் மாலிகுத்தாரை மதீனாவைச் சேர்ந்த தாபிஈன் என்றும் ஹதீத் வல்லுனர் (முஹத்தித்) என்றும் கூறியதாக ஹாபிழ் இப்னு அஸாகிரின் தாரீஹ் திமிஷ்கில் கூறப்பட்டுள்ளது

الكتب » تاريخ دمشق لابن عساكر » حرف اللام » ذِكْرُ مَنِ اسْمُهُ مَالِكٌ » مَالِكُ بْنُ عِيَاضٍ الْمَعْرُوفُ بِمَالِكِ الدَّارِ ...

مالك الدار مولى عمر بن الخطاب ولاه عمر كلة عيال فلما قام عثمان ولي مالك الدار القسم فسمي مالك الدار قال وسمعت مصعب بن عبد الله يقول مالك الدار مولى عمر بن الخطاب روى عن أبي بكر الصديق وعمر بن الخطاب وقد انتسبت ولده إلى جبلان أخبرنا أبو البركات الأنماطي وأبو العز الكيلي قالا أنا أبو طاهر أحمد بن الحسن زاد الأنماطي وأبو الفضل بن خير وقالا أنا محمد بن الحسن أنا أبو الحسين الأهوازي أنا أبو حفص نا خليفة بن خياط قال مالك الدار مولى عمر بن الخطاب أخبرنا أبو البركات بن المبارك أنا أبو طاهر الباقلاني أنا يوسف بن رباح أنا أبو بكر المهندس نا أبو بشر الدولابي نا معاوية بن صالح قال سمعت يحيى بن معين يقول في تسمية تابعي أهل المدينة ومحدثيهم مالك الدار مولى عمر بن الخطاب

5.

இஸாபாவில் இப்னு ஹஜர் குறிப்பிடுவதின்படி (கீழே தரப்பட்டுள்ளது)  மாலிக்குத்தார் அமீருல் மூமினீன் உமர் (رضي الله عنه) மற்றும் அமீருல் மூமினீன் உஸ்மான் (رضي الله عنه) அவர்களாலும் பைத்துல்மாலின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமீருல் மூமினீன் உமர்  (رضي الله عنه) அவர்கள் போன்ற ஒரு மாபெரும் ஸஹாபி மாலிக்குத்தாரை பைத்துல்மாலை நிர்வகிக்கின்ற ஒரு அதி முக்கியமான பொறுப்பை கொடுத்ததில் இருந்தே மாலிக்குத்தாரினுடைய நம்பகத்தன்மையை உறுதி செய்யலாம். பைத்துல்மாலை நிர்வகிப்பவர் நாட்டின் வரவு செலவுகளையெல்லாம் துல்லியமான முறையில் பதிவு செய்பவராகவல்லவா இருந்திருக்க வேண்டும்?

அவர்
மிகத்துல்லியமானவர் என்பதனை எந்தவொரு ஸலபும் அவரை விமர்சிக்காததிலிருந்து புரிந்து கொள்ளலாம். அமீருல் மூமினீன் உமர் (رضي الله عنه) அவர்கள் மாலிக்குத்தாரை ஏற்றுக்கொண்டதை அடிப்படையாக வைத்து ஏன் அவரை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது?


இமாம் ஹாபிழ் இப்னு கதீர் தமது இரண்டு புத்தகங்களில் மாலிக்குத்தாரின் அறிவுப்பை ஸஹீஹ் என கூறியுள்ளதால் அவரும் மாலிக்குத்தாரை நம்பத்தகுந்தவர் என்றே கணித்திருக்க வேண்டும்.





மாலிக்குத்தார் ஒரு ஸஹாபி என நான்கு ஹாபிழ்கள் கூறியுள்ளனர்:


  • இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர் மாலிக்குத்தாரை ஒரு ஸஹாபி என தமது இஸாபாபில் கூறியுள்ளார். புகாரி தனது தாரீஹில் மாலிக்குத்தார் ஊடாக அறிவித்ததாகவும் கூறுகிறார்

قال الحافظ في الإصابة في تميز الصحابة (6/274) :

مالك بن عياض مولى عمر هو الذي يقال له مالك الدار له إدراك وسمع من أبي بكر الصديق وروى عن الشيخين ومعاذ وأبي عبيدة روى عنه أبو صالح السمان وابناه عون وعبد الله ابنا مالك وأخرج البخاري في التاريخ من طريق أبي صالح ذكوان عن مالك الدار أن عمر قال في قحوط المطر يا رب لا آلو إلا ما عجزت عنه وأخرجه بن أبي خيثمة من هذا الوجه مطولا قال أصاب الناس قحط في زمن عمر فجاء رجل إلى قبر النبي صلى الله عليه و سلم فقال يا رسول الله استسق الله لأمتك فأتاه النبي صلى الله عليه و سلم في المنام فقال له ائت عمر فقل له إنكم مستسقون فعليك الكفين قال فبكى عمر وقال يا رب ما آلوا إلا ما عجزت عنه وروينا في فوائد داود بن عمرو الضبي جمع البغوي من طريق عبد الرحمن بن سعيد بن يربوع المخزومي عن مالك الدار قال دعاني عمر بن الخطاب يوما فإذا عنده صرة من ذهب فيها أربعمائة دينار فقال اذهب بهذه إلى أبي عبيدة فذكر قصته وذكر بن سعد في الطبقة الأولى من التابعين في أهل المدينة قال روى عن أبي بكر وعمر وكان معروفا وقال أبو عبيدة ولاه عمر كيلة عيال عمر فلما قدم عثمان ولاه القسم فسمي مالك الدار وقال إسماعيل القاضي عن علي بن المديني كان مالك الدار خازنا لعمر

  • இமாம் தஹபி தனது தஜ்ரீத் அஸ்மாஉல் ஸஹாபாவில் மாலிக்குத்தாரை ஸஹாபி எனக் கூறுகிறார். (2/51, இல. 529)
  • ஹாபிழ் இப்னு ஹஜரின் மாணவரான ஹாபிழ் தகியுத்தீன் இப்னு ஃபஹ்த் அல்-மக்கீ தனது முக்தஸர் அஸ்மாஉஸ் ஸஹாபாவில் மாலிக்குத்தாரை ஸஹாபி எனக் கூறுகிறார்.
  • இமாம் ஸர்க்கானி தமது ஷரஹ் மவாஹிப் அல்-லதுனிய்யாவிலும் மாலிக்குத்தாரை ஸஹாபி எனக் கூறுகிறார்.

அமீருல் மூமினீன் ஃபில் ஹதீத் ஷெய்குல் இஸ்லாம் இப்னு ஹஜர் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் மாலிக்குத்தாரை ஸஹாபி எனச் கொல்லியிருக்க வாய்ப்பில்லை. அந்த மூல ஆதாரம் என்ன என எமக்கு தெரியாததால் ஹாபிழ் இப்னு ஹஜரின் கூற்றை நிராகரிக்க முடியாது. மேலும், இப்னு ஹஜர் தவிர வேறு மூன்று ஹாபிழ்களும் மாலிக்குத்தார் ஒரு ஸஹாபி என எந்த ஒரு அடிப்படையும் இல்லாமல் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. மாலிக்குத்தார் ஒரு ஸஹாபி என்றால் அவரது நம்பகத்தன்மையை பற்றி ஆராய வேண்டிய அவசியமேயில்லை.



மாலிக்குத்தார் ஸஹாபி அல்ல என வாதிட்டாலும் அது மாலிக்குத்தாரின் நம்பகத்தன்மையை பாதிக்காது, ஏனென்றால் அவ்வாறு ஸஹாபியா தாபியீனா என சந்தேகமுள்ள பல அறிவிப்பாளர்களை நம்பத்தகுந்தவர்கள் என ஹாபிழ்கள் கணித்துள்ளனர். அதற்கு உதாரணமாக அறிவிப்பாளர் ஷரீக் இப்னு ஹன்பலை கூறலாம்.

ஷரீக் இப்னு ஹன்பலும் மாலிக்குத்தாரும்


மாலிக்குத்தாரைப் போல ஸஹாபியா தாபியீனா என கருத்து வேறுபாடுள்ள ஷரீக் இப்னு ஹன்பலை பற்றி இமாம் இப்னு ஹஜர் தஹ்தீபுத் தஹ்தீபில் பின்வருமாறு சொல்கிறார்

شريك بن حنبل العبسي الكوفي قال البخاري وقال بعضهم بن شرحبيل وهو وهم روى عن النبي صلى الله عليه وسلم مرسلا وعن علي روى عنه أبو إسحاق السبيعي وعمير بن تميم الثعلبي قال بن أبي حاتم عن أبيه ليست له صحبة ومن الناس من يدخله في المسند وذكره بن حبان في الثقات رويا له حديثا في الثوم قلت وقال من قال شريك بن حنبل فقد وهم عكس ما قال البخاري وقال صاحب الميزان لا يدري من هو وذكره بن سعد في التابعين وقال كان معروفا قليل الحديث وقال بن السكن روى عنه حديث واحد قيل فيه شريك عن النبي صلى الله عليه وسلم وقيل شريك عن علي وقال العسكري لا تثبت له صحبة وأورد بن مندة حديثه وفيه التصريح بسماعه عن النبي صلى الله عليه وسلم ثم ذكر أنه روى عنه عن علي وهو الصواب



இதில் ஷரீக் இப்னு ஹன்பலைப் பற்றி கவனிக்க வேண்டிய விடயங்கள்:
  1. ஷரீக் இப்னு ஹன்பல் ஸஹாபியா தாபியீனா என கருத்து வேறுபாடுள்ளது, மாலிக்குத்தாரைப் போல.
  2. இப்னு ஸஅத், ஷரீக் இப்னு ஹன்பல் தாபியீன் என்றும், அறியப்பட்டவர் எனவும்  கூறுகிறார், மாலிக்குத்தாரைப் போல. 
  3. இப்னு ஹிப்பான் ஷரீக் இப்னு ஹன்பலை கிதாபுத் திகாத்தில் குறிப்பிட்டுள்ளார், மாலிக்குத்தாரைப் போல. 
  4. புகாரி எந்தவொரு விமர்சனமும் செய்யாமல் ஷரீக் இப்னு ஹன்பல் வழியாக தமது தாரீஹில் அறிவிக்கிறார், மாலிக்குத்தார் வழியாக அறிவிப்பது போல. 
  5. ஷரீக் இப்னு ஹன்பலிடமிருந்து இருவர் அறிவிக்கின்றனர். மாலிக்குத்த்தாரிடமிருந்து நால்வர் அறிவிக்கின்றனர்.

எனவே அறிவிப்பாகளைப் பற்றிய விமர்சனத்தை எடுத்துக் கொண்டால் ஷரீக் இப்னு ஹன்பல் கிட்டத்தட்ட மாலிக்குத்தாரை போன்ற அல்லது அதற்கும் குறைந்த 'தீலை (நிறை) உடைய ஒரு அறிவிப்பாளரேயாகும். எனவே இவரைப் பற்றி ஹாபிழ்கள் என்ன கூறுகிறார்கள் என பார்ப்போமா?

ஹாபிழ் இப்னு ஹஜர் தக்ரீபுத் தஹ்தீபில் ஷரீக் இப்னு ஹன்பல் நம்பிக்கையானவர் என்று கூறுகிறார்
شريك ابن حنبل العبسي الكوفي وقيل ابن شرحبيل ثقة من الثانية ولم يثبت أن له صحبة د ت

ஹாபிழ் தஹபியும் தனது காஷிஃபில் ஷரீக் இப்னு ஹன்பலை ஏற்றுக்கொள்ளத்தக்கவர் என்று கூறுகிறார்
شريك بن حنبل العبسي عن علي وعنه أبو إسحاق وعمير بن تميم وثق


எனவே  இதுவே போதும் மாலிக்குத்தார் நம்பிக்கையானவர் என கூற..! 

மேலும் ஷரீக் இப்னு ஹன்பலை விட மாலிக்குத்தாருக்கு சில கூடுதல் சிறப்புகளுமுண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்,

  1. மாலிக்குத்தாரை ஹாபிழ் கலீலி புகழ்ந்துள்ளார். 
  2. மாலிக்குத்தாரை இமாம் இப்னு மயீன் முஹத்தித் எனக் கூறியுள்ளார்.
  3.  மாலிக்குத்தாரிடமிருந்து 4 அறிவிப்பாளர்கள் அறிவிக்கின்றனர்.

மாலிக்குத்தாரின் நம்பகத்தன்மையை நிரூபிக்க இதைவிட என்ன வேணும்?


அல்பானியின் ஆதரவாளர்களுக்கு சில தவகல்கள்:



1.
இதே ஷரீக் இப்னு ஹன்பல் வழியாக சுனன் திர்மிதியில் வரும் பின்வரும் ஹதீதை பற்றி ஸலபிகள் பின்பற்றுகின்ற அல்பானீ என்ன கூறுகிறார் என
எதிர்வு கூற முடியுமா ?

سنن الترمذي/كتاب الأطعمة
حدثنا محمد بن مدوية حدثنا مسدد حدثنا الجراح بن مليح والد وكيع عن أبي إسحاق عن شريك بن حنبل عن علي أنه قال نهي عن أكل الثوم إلا مطبوخا

அல்பானீ இந்த ஹதீதை "ஸஹீஹ்" எனக் கூறியுள்ளார்..!!


ஷரீக் இப்னு ஹன்பலை ஏற்றுக் கொண்ட அல்பானி மாலிக்குத்தாரை ஏற்றுக் கொள்ளாததன் மர்மம் என்ன?


2.
இப்னு மயீன் மாலிக்குத்தாரை "முஹத்தித்" எனக் கூறியதை இப்னு அஸாகிரின் தாரீஹில் இருந்து பார்த்தோம்.

இப்போது எந்தவொரு ஜர்ஹோ (குறை) 'தீலோ (நிறை) இல்லாத யஹ்யா இப்னுல் உர்யானுல் ஹரவீ எனும் அறிவிப்பாளரை பற்றி அல்பானி "ஸில்ஸிலதுல் அஹாதீதுஸ் ஸஹீஹஹ்" வில் என்ன கூறுகிறார் எனப் பார்ப்போம்.

الأول : قال المخلص في " الفوائد المنتقاة " في " الثاني من السادس منها " ( ق 190 / 1 ) : حدثنا يحيى ( يعني ابن صاعد ) قال : حدثنا الجراح بن مخلد قال : حدثنا يحيى بن العريان الهروي قال : حدثنا حاتم بن إسماعيل عن أسامة بن زيد عن نافع عنه . وبهذا السند رواه الدارقطني ( 36 ) وعنه ابن الجوزي , ورواه الخطيب في " الموضح " ( 1 / 111 ) عن ابن صاعد , وفي " التاريخ " ( 14 / 161 ) من طريقين آخرين عن الجراح بن مخلد به . وهذا سند حسن عندي , فإن رجاله كلهم ثقات معروفون غير الهروي هذا فقد ترجمه الخطيب ولم يذكر فيه جرحاً ولا تعديلاً , غير أنه وصفه بأنه كان محدثاً .



எந்தவொரு ஜர்ஹோ (குறை) த'தீலோ (நிறை) இல்லாத யஹ்யா இப்னுல் உர்யானுல் ஹரவீ எனும் அறிவிப்பாளரை ஹாபிழ் கதீப் அல்-பக்தாதி முஹத்தித் எனக்கூறினார் என்பதை மட்டும் அடிப்படையாக வைத்து அல்பானி தாரகுத்னியில் அவர் வழியாக அறிவிக்கப்படும் ஹதீதை "ஹஸன்" எனக் கூறுகிறார்.


எனவே இப்னு மயீன் மாலிக்குத்தாரை "முஹத்தித்" எனக் கூறியிருக்க அவரை மட்டும் அல்பானீ ஏற்றுக் கொள்ளாததன் மர்மம் என்ன?


மாலிக்குத்தார் பற்றிய தகவல் அல்பானிக்கு கிடைக்காததால் அவர் மாலிக்குத்தாரை அறியப்படாதவர் எனக் கூறியிருக்கமுடியும். அல்லது வேண்டுமென்றே மறைத்திருக்கலாம், அல்லாஹு அ'லம்!


எது எப்படியிருந்தாலும் எமக்கு அல்பானியின் கருத்து முக்கியமல்ல, அவர் ஒரு ஹாபிழுமல்ல! எமக்கு ஷெய்குல் இஸ்லாம் இப்னு ஹஜர், ஹாபிழ் தஹபி மற்றும் ஹாபிழ் இப்னு கதீர் போன்ற ஹாபிழ்களின் முடிவுகளே முக்கியம். அவர்களின் கூற்றுப்படி மாலிக்குத்தாரின் ஹதீத் ஸஹீஹாகும்.

கப்ருக்கு சென்று உதவி தேடிய மனிதர் பிலால் இப்னு ஹாரித் அல்-முஸனீ எனும் ஸஹாபியாவார்.


ஹாபிழ் இப்னு ஹஜர் தனது ஃபத்ஹுல் பாரியில் (2/495) கப்ருக்கு சென்று உதவி கோரிய மனிதர் பிலால் இப்னு ஹாரித் அல்-முஸனீ எனும் ஸஹாபியென ஸய்ஃப் இப்னு உமர் தமீமி தனது ஃபுதூஹ் எனும் நூலில் கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


وروى ابن أبي شيبة بإسناد صحيح من رواية أبي صالح السمان عن مالك الداري - وكان خازن عمر - قال " أصاب الناس قحط في زمن عمر فجاء رجل إلى قبر النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم فقال: يا رسول الله استسق لأمتك فإنهم قد هلكوا، فأتى الرجل في المنام فقيل له: ائت عمر " الحديث.
وقد روى سيف في الفتوح أن الذي رأى المنام المذكور هو بلال بن الحارث المزني أحد الصحابة، وظهر بهذا كله مناسبة الترجمة لأصل هذه القصة أيضا والله الموفق


சிலர் ஸய்ஃப் இப்னு உமர் பலவீனமானவர். எனவே அவரின் கூற்றை ஏற்க முடியாது எனக் கூறுகின்றனர்.

பதில்:

1.
வஸீலாவுக்கான ஆதாரம் கப்ருக்கு சென்று உதவி தேடிய மனிதரின் செயலிலுண்டு என்று சொல்வதை விட அச்செயலை பற்றி அறிந்தும் அதனை கண்டிக்காமல் இருந்த அமீருல் மூமினீன் உமர் (رضي الله عنه) அவர்களின் செய்கையிலேயே உள்ளது. ஒருவர் ஷிர்க்கை செய்தாரென்றால்  உமர்
(رضي الله عنه) அதனை கண்டித்திருப்பார்களல்லவா ? அவரை மீண்டும் கலிமாவை மொழிந்து இஸ்லாத்துக்கு வருமாறு பணித்திருப்பார்களல்லவா?

உமர் (رضي الله عنه) அவர்கள், கப்ருக்கு சென்று உதவி தேடிய மனிதரின் செயலை ஏற்றுக்கொண்டார்கள் என்பதே எமது
வஸீலாவுக்கான ஆதாரம்.

2.
ஸய்ஃப் இப்னு உமரைப்பற்றி இப்னு ஹஜர் தக்ரீபுத் தஹ்தீபில் (இல.2724) கூறுகையில், அவர் ஹதீதுகளை அறிவிப்பதில் பலவீனமானவர் என்றும், வரலாற்று நிகழ்வுகளை அறிவிப்பதில் ஒரு தூண் என்றும் (மிக மிக உறுதியானவர்) என்றும் குறிப்பிட்டுள்ளார். (ضعيف الحديث عمدة في التاريخ)


தபரியின் தாரீஹ், இப்னு ஹஜரின் இஸாபா, இப்னு கதீரின் பிதாயா, ஸஹாவீயின் ஃபத்ஹுல் முகீத்,இப்னு அப்தில் பர்ரின் இஸ்தீஆப், தஹபியின் தாரீஹுல் இஸ்லாம் போன்றவற்றில் ஸய்ஃப் இப்னு உமரின் வழியாக அறிவிக்கப்பட்டுள்ள அநேக வரலாற்று நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாலிகுத்தாரின் சம்பவமானது ஒரு வரலாற்று நிகழ்வேயன்றி ஹதீதல்ல. எனவே கப்ருக்கு சென்ற மனிதர் பிலால் இப்னு ஹாரித் என்ற ஸய்ஃபின் கூற்று ஏற்றுக்கொள்ள வேண்டியதே.

கப்ருக்கு சென்று உதவி கோரிய மனிதர் பிலால் இப்னு ஹாரித் அல்-முஸனீ (رضي الله عنه) எனும் ஸஹாபியெனும் ஸய்ஃப் இப்னு உமரின் கூற்றை பின்வரும் இமாம்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஹாபிழ் இப்னு ஹஜர் - ஃபத்ஹுல் பாரி
ஹாபிழ் இப்னு கதீர் - பிதாயா வந் நிஹாயா
இப்னு அதீர் - அல்-காமில் ஃபில் தாரீஹ்
தபரி - தாரீஹ்

எனவே ஒரு ஸஹாபியான பிலால் இப்னு ஹாரித் அல்-முஸனீ (رضي الله عنه) அவர்களின் செய்கையும் கூட வஸீலாவுக்கான ஆதாரமே..!


-ஷெய்க் அபுல் ஹஸன்-






   Note:    











 [1]
                 مصنف ابن أبي شيبة » كِتَابُ  الْفَضَائِلِ  » مَا ذُكِرَ فِي فَضْلِ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْه

حدثنا أبو معاوية ، عن الأعمش ، عن أبي صالح ، عن مالك الدار ، قال : وكان خازن عمر على الطعام ، قال : أصاب الناس قحط في زمن عمر ، فجاء رجل إلى قبر النبي صلى الله عليه وسلم فقال : يا رسول الله ، استسق لأمتك فإنهم قد هلكوا ، فأتى الرجل في المنام فقيل له : " ائت عمر فأقرئه السلام ، وأخبره أنكم مستقيمون وقل له : عليك الكيس ، عليك الكيس " ، فأتى عمر فأخبره فبكى عمر ثم 
قال : يا رب لا آلو إلا ما عجزت عنه
  [2]
الْإِرْشَادُ فِي مَعْرِفَةِ عُلَمَاءِ الْحَدِيثِ لِلْخَلِيلِيِّ >> مَالِكُ الدَّارِ
مالك الدار مولى عمر بن الخطاب الرعاء عنه : تابعي , قديم , متفق عليه , أثنى عليه التابعون , وليس بكثير الرواية , روى عن أبي بكر الصديق , وعمر , وقد انتسب ولده إلى جبلان ناحية . حدثني محمد بن أحمد بن عبدوس المزكي أبو بكر النيسابوري , حدثنا عبد الله بن محمد بن الحسن الشرقي , حدثنا محمد بن عبد الوهاب قال : قلت لعلي بن عثام العامري الكوفي : لم سمي مالك الدار ؟ فقال : الداري المتطيب . حدثنا محمد بن الحسن بن الفتح , حدثنا عبد الله بن محمد البغوي , حدثنا أبو خيثمة , حدثنا محمد بن خازم الضرير , حدثنا الأعمش , عن أبي صالح , عن مالك الدار ، قال : أصاب الناس قحط في زمان عمر بن الخطاب , فجاء رجل إلى قبر النبي صلى الله عليه وسلم فقال : يا نبي الله , استسق الله لأمتك فرأى النبي صلى الله عليه وسلم في المنام فقال : " ائت عمر , فأقرئه السلام , وقل له : إنكم مسقون , فعليك بالكيس الكيس " . قال : فبكى عمر , وقال : يا رب , ما آلو إلا ما عجزت عنه يقال : إن أبا صالح سمع مالك الدار هذا الحديث , والباقون أرسلوه
[3]
وروى أبو معاوية عن الأعمش عن أبي صالح عن مالك الدار قال‏:‏ أصاب الناس قحط في زمن عمر فجاء رجل إلى قبر النبي صلى الله عليه وسلم فقال‏:‏ يا رسول الله استسق لأمتك فإنهم قد هلكوا‏

[4]
 وقال الحافظ أبو بكر البيهقي: أخبرنا أبو نصر بن قتادة، وأبو بكر الفارسي قالا: حدثنا أبو عمر بن مطر، حدثنا إبراهيم بن علي الذهلي، حدثنا يحيى بن يحيى، حدثنا أبو معاوية، عن الأعمش، عن أبي صالح، عن مالك قال: أصاب الناس قحط في زمن عمر بن الخطاب، فجاء رجل إلى قبر النبي صلى الله عليه وسلم فقال: يا رسول الله استسق الله لأمتك فإنهم قد هلكوا.
فأتاه رسول الله صلى الله عليه وسلم في المنام فقال: إيت عمر، فأقرئه مني السلام، وأخبرهم أنه مسقون، وقل له عليك بالكيس الكيس.
فأتى الرجل فأخبر عمر، فقال: يا رب ما آلوا إلا ما عجزت عنه.وهذا إسناد صحيح

 [5]
وروى ابن أبي شيبة بإسناد صحيح من رواية أبي صالح السمان عن مالك الداري - وكان خازن عمر - قال " أصاب الناس قحط في زمن عمر فجاء رجل إلى قبر النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم فقال: يا رسول الله استسق لأمتك فإنهم قد هلكوا، فأتى الرجل في المنام فقيل له: ائت عمر " الحديث وقد روى سيف في الفتوح أن الذي رأى المنام المذكور هو بلال بن الحارث المزني أحد الصحابة، وظهر بهذا كله مناسبة الترجمة لأصل هذه القصة أيضا والله الموفق
 



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.