Monday, December 12, 2011

கப்ரை முத்தமிடலாமா...?


حَدَّثَنَا عَبدُ الْمَلِكِ بنُ عَمْرٍو ، حَدَّثَنَا كَثِيرُ بنُ زَيْدٍ ، عَنْ دَاوُدَ بنِ أَبي صَالِحٍ ، قَالَ : أَقْبلَ مَرْوَانُ يَوْمًا فَوَجَدَ رَجُلًا وَاضِعًا وَجْهَهُ عَلَى الْقَبرِ ، فَقَالَ : أَتَدْرِي مَا تَصْنَعُ ؟ فَأَقْبلَ عَلَيْهِ فَإِذَا هُوَ أَبو أَيُّوب ، فَقَالَ : نَعَمْ ، جِئْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ آتِ الْحَجَرَ ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : " لَا تَبكُوا عَلَى الدِّينِ إِذَا وَلِيَهُ أَهْلُهُ ، وَلَكِنْ ابكُوا عَلَيْهِ إِذَا وَلِيَهُ غَيْرُ أَهْلِهِ " .


தாவூத் இப்னு சாலிஹ் அறிவிக்கிறார்:

ஒரு நாள் [மதீனாவின் ஆளுநராகிய] மர்வான் [இப்னு ஹகம்] ஒரு மனிதர் [ரஸுலுல்லாஹ் அவர்களின்] கப்ரின் மீது தமது முகத்தை வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் [அம்மனிதரிடம்] நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என உங்களுக்கு தெரியுமா எனக் கேட்டார். பின் மர்வான் அவரை நெருங்கியபோது அவர் [நபித்தோழரான] அபூ அய்யூப் அல்-அன்சாரி என தெரியவந்தது. அபூ அய்யூப் அவர்கள் [மர்வானிடம்] : "ஆம். நான் ரஸுலுல்லாஹ் அவர்களிடம் வந்தேன் ஒரு கல்லிடமல்ல, ரஸுலுல்லாஹ் அவர்கள் உங்கள் மார்க்கத்தின் பாதுகாவலர் மார்க்க பற்றுள்ளவராக

இருந்தால் உங்கள் மார்க்கத்திற்காக அழாதீர்கள், ஆனால் அவர் மார்க்கப்பற்றற்றவராக இருந்தால் அழுங்கள் என கூற நான் கேட்டுள்ளேன்" என [மர்வானுக்கு] பதிலளித்தார்.

நூற்கள்: முஸ்னத் அஹமத், முஸ்தத்ரக் அல்-ஹாகிம்,  இமாம் தகியுத்தீன் சுப்கியின் ஷிபாஉஸ் ஸிகாம்

இமாம் ஹாகிம் மற்றும் இமாம் தஹபி ஆகியோர் இந்த ஹதீதை ஸஹீஹ் என கூறியுள்ளனர்
இமாம் ஹைதமீ (رحمه الله) அவர்கள் தமது மஜ்மஉஸ் ஸவாயித்இல் இந்த ஹதீதை எமது தலைவர் ரஸுலுல்லாஹ் صلى الله عليه وسلم  அவர்களின் கப்ரின் மீது முகத்தை வைத்தல் [  باب وضع الوجه على قبر سيدنا رسول الله صلى الله عليه وسلم  ] எனும் தலைப்பில் பதிவு செய்துள்ளார்.

அபூ அய்யூப் அல்-அன்ஸாரி (رضي الله عنه) வின் இந்த ஹதீதில் இருந்து கப்ரை முத்தமிடுவது இஸ்லாத்தில் ஆகுமானது என தெரிகிறது.

இமாம் அஹமத் இப்னு ஹன்பல் (رحمه الله) இன் மகன் அப்துல்லாஹ் கூறுகிறார்:

பரக்கத்தை பெறும் பொருட்டு நபியின் மிம்பரை தொடுகின்ற, முத்தமிடுகின்ற மற்றும் [ரஸுலுல்லாஹ்வின்] கப்ரிலும் அதேமாதிரி செய்கின்ற அல்லது அதற்கு ஒத்தவாறு செய்கின்ற ஒரு மனிதரை பற்றி நான் எனது தந்தையிடம் கேட்டேன். அதற்கு அவர் "அவ்வாறு செய்வதில் எந்தவொரு தவறும் இல்லை" எனக் பதிலளித்தார். [1]

அதாரம்: அல்-இலல் பீ ம'ரிஃபதுர் ரிஜால் (2/492).

வஹ்ஹாபிகள் இமாம் அஹமதையையும் கப்ர் வணங்கி என்று கூறி அவரின் முஸ்னதிலுள்ள மொத்த ஹதீதுகளையும் நிராகரிப்பார்களா? ஷிர்க் செய்த ஒருவர் பதிவு செய்த ஹதீதை எவ்வாறு வஹ்ஹாபிகள் ஏற்றுக்கொள்வார்கள்?!

ஹதீத்களின் அறிவிப்பாளர்களை பற்றிய விமர்சனங்களை அறிந்து கொள்ள வஹ்ஹாபிகள் கூட நம்பியுள்ள இமாம் தஹபி (رحمه الله) கூட இமாம் அஹமதின் இந்த சம்பவத்தை தமது நூலில் குறிப்பிடுகிறார். இவ்வாறு கப்ரை முத்தமிடுவதால் பரக்கத் பெறுவதை எதிர்ப்பவர்கள் கவாரிஜ்கள் என்றும் அவ்வாறு எதிர்ப்பது பித்ஆ என்றும் அவ்வாறான எண்ணங்களை விட்டும் தாம் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவதாகவும் குறிப்பிடுகிறார். [2]

அதாரம்: சியர் அலாமின் நுபலாஉ

வஹ்ஹாபிகள் இமாம் தஹபியையும் கப்ர் வணங்கி என்று கூறி ஹதீத் கலையில் அவரின் கூற்றுக்களை நிராகரிப்பார்களா?
சில சகோதரர்கள் கப்ரை முத்தமிடலையும் கப்ருக்கு சஜ்தா செய்வதையும் ஒன்றென கருதி குழம்பியுள்ளனர். சஜ்தா செய்வதற்கு உடலின் இரு கைகள், இரு பாதங்கள், இரு முழங்கால்கள், மூக்கு மற்றும் நெற்றி ஆகிய 8 பாகங்களும் தரையில் பட வேண்டும். எனவே சஜ்தாவுக்கும் குனிந்து முத்தமிடலுக்கும் தெளிவான வேறுபாடுள்ளது. மேலும் சஜ்தாவானது ஒரு வணக்கமாக கருதி அதனை அல்லாஹ் அல்லாத வேறு ஒன்றுக்கு செய்யும்போதே அது ஷிர்க் ஆகும். மரியாதைக்காக செய்யப்படும் சஜ்தா ஹராம் ஆகுமே அன்றி ஷிர்க் ஆகாது. ரஸுலுல்லாஹ்வின் ஹதீதின் படி ஒரு முஸ்லிமை பார்த்து முஷ்ரிக் காபிர் எனக் கூறினால் சொன்னவர் காபிராகி விடுவார்.









[1]
سألته ، عن الرجل يمس منبر النبي (ص) ويتبرك بمسه ويقبله ويفعل بالقبر مثل ذلك أو نحو هذا يريد بذلك التقرب إلى الله عزوجل ، فقال : لا بأس بذلك.

أحمد بن حنبل - العلل- الجزء : ( 2 ) - رقم الصفحة :  492

[2]
قلت: أين المتنطع المنكر على أحمد، وقد ثبت أن عبدالله سأل أباه عمن يلمس رمانة منبر النبي، صلى الله عليه وسلم، ويمس الحجرة النبوية، فقال: لا أرى بذلك بأسا.
أعاذنا الله وإياكم من رأي الخوارج ومن البدع

الذهبي - سير أعلام النبلاء




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.